> குருத்து: சங்கரசுப்பு மகன் படுகொலை - சில பகிர்தல்கள்!

July 11, 2011

சங்கரசுப்பு மகன் படுகொலை - சில பகிர்தல்கள்!


வழக்கறிஞர் சங்கர சுப்பு அவர்களின் மகன் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு மாதம் காலம் நெருங்கியும் வழக்கில் முன்னேற்றம் இல்லாதது குறித்து, கடந்த வாரம் வில்லிவாக்கத்தில் ம.ஜ.இ.கவும், சில அமைப்புகள் சேர்ந்து கண்டனக் கூட்டம் நடத்தியது.

கூட்டத்தில், காவல்துறையின், இராணுவத்தின் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை அம்பலப்படுத்தி பலரும் பேசினார்கள்.

வழக்கு சம்பந்தமாக பகிர்ந்து கொள்வதற்கான செய்திகளில் சில:

*சாதாரண குற்ற வழக்கோ, கொலை வழக்கோ நடைமுறை என்ன? கொலை செய்யப்பட்ட நபர் குடும்பம் யாரை சந்தேகப்படுகிறதோ, அவர்களை அழைத்து வந்து, விசாரிப்பது தான்.
திருமுல்லைவாயில் ஆய்வாளர்கள் ரியாசுதீன், கண்ணன் இரண்டு பேரும் "உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது" என மிரட்டியும் இருக்கிறார்கள்.ஆகையால், சங்கரசுப்பு அவர்கள், சம்பந்தபட்ட இருவர் மீதும் சந்தேகம் இருக்கிறது. விசாரியுங்கள் என தெரிவித்த பிறகும், இன்று வரைக்கும் இருவரிடம் விசாரணை சி.பி.ஐ. நடத்தவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா! போலீசார் தான் கொன்றிருப்பார்கள் என!

* சதீஷ்குமார் உடலை ஏரியில் இருந்து எடுத்ததும், சதீஷ்குமாரின் சட்டைபையில் இரண்டு பிளேடுகள் இருந்ததாக திருமங்கலம் ஆய்வாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையில் மருத்துவர்கள் அப்படி இருந்ததாக் தெரிவிக்கவில்லை. ஏன் இப்படி தெரிவித்தார்? தானே தற்கொலை செய்து கொண்டார் என நிருபீக்க தானே? போலீஸ் மீது சந்தேகம் கொள்ள இதை எடுத்துக்கொள்ளலாம்.

* சதீஷ்குமாரின் குடும்ப மருத்துவரிடம் போய், "தற்கொலை மனப்பான்மையில் தான் சதீஷ்குமார் இருந்தார்" என சான்றிதழ் கேட்டதாம் காவல்துறை. அவர் தர மறுத்துவிட்டார். தற்கொலை வழக்காக ஏன் முடிக்க பார்த்தது காவல்துறை?

* மனித உரிமை மீறல் வழக்குகள், பல புரட்சிகர அமைப்புகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்காடும் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் மகன் வழக்கே இவ்வளவு இழுத்தடிக்கப்படுகிறது என்றால், ஒரு சராசரி மனிதனின் வழக்கு என்ன நிலைக்கு ஆகும்?

டெயில் பீஸ் : காவல்துறை ஆய்வாளர்கள் இருவர் மீது சந்தேகம் வலுவாக இருந்ததால், தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டாம் என முறையிட்டு, வழக்கை சிபிஐக்கு மாற்றப்படும் பொழுது, சிபிஐ "எங்களிடம் விசாரிக்க ஆள்கள் இல்லை. தமிழக அரசு ஆட்கள் தரவேண்டும்" என வேண்டியதாம். சிபிஐ-ன்னா சிரிப்பு போலீஸ்-ன்னு வினவில் படித்தது நினைவுக்கு வருகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை : போலீசு கோடூரம்!

0 பின்னூட்டங்கள்: