> குருத்து: தனிநபர் பகுத்தறிவாதம்

June 27, 2012

தனிநபர் பகுத்தறிவாதம்

நண்பனின் மூத்த சகோதரியின் கணவர் 'ஹார்ட் அட்டாக்கால்' திடீரென இறந்தார்.  நண்பனுடன் இறப்பு நிகழ்வுக்கு போயிருந்தேன்.  இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லை. அவருடைய மனைவியின் சகோதரியின் பிள்ளையை வைத்து, எல்லா சடங்குகளும் 'குறைவின்றி' செய்தார்கள்.

இதில் நகை முரண் என்னவென்றால், தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்த்தவர் அவர்..  தமிழக அரசின் போக்குவரத்து துறையில் குமாஸ்தாவாக சேர்ந்து, ஓய்வு பெறும் பொழுது, சூப்பரின்டடாக (Supt.)  வெளியேறினார்.  எந்த அமைப்பிலும் இல்லை.  குடும்பங்களில், உறவுகளில் தன் கருத்துக்கு  யாரையும் வென்றெடுக்கவும் இல்லை.

கொஞ்சம் யோசித்திருந்தால், தன் இறப்பிற்கு பிறகு சடங்குகளற்ற முறையில் தான் அடக்கம் செய்யவேண்டும் என உயில் போல எழுதி வைத்திருக்கலாம் அல்லது நெருங்கிய மரியாதைக்குரிய உறவுகளிடம் தனது ஆசையை நிறைவேற்ற சொல்லி தெரிவித்திருக்கலாம்.  நான் கவனித்தவரையில் சாவை எதிர்கொள்ளும் பக்குவம் தமிழ் சமூகத்திற்கு வரவில்லை எனலாம்.

தனிநபர் பகுத்தறிவுவாதத்திற்கு ஏற்பட்ட உதாரணம் இது!

1 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

தனி நபராக இருக்கும் நான், முன்பே, எந்த வித சடங்கு சம்பிரதாயங்கள் எதுவும் செய்யக்கூடாது என்று, என் சகோதிரியின் மகன் மகள்களிடம் உத்திரவு வாங்கிவிட்டேன். அந்த உத்திரவை நிறைவேற்றுவதும்,நிறைவேற்றாததும் அவர்களின் வாழ்நிலை பொருத்தது என்று நிணைக்கிறேன்.