> குருத்து: ஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்கு!

January 23, 2013

ஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்கு!

ஒன்றாவது படிக்கும் எனது பெண்ணுக்கு நேற்றிரவு விடுகதை போட்டேன்.  (எங்க அப்பா எனக்கு சொன்ன கதை இது :) 

ஒரு ஆள் ஆற்றின் க‌ரையில் ஒரு புலி, ஒரு ஆடு, ஒரு புல்க‌ட்டு வைத்து காத்திருக்கிறார். சிறிய ப‌ரிசல் கிடைக்கிற‌து.  அதில் ஒவ்வொன்றாக‌ தான் க‌ட‌த்த முடியும். வெற்றிக‌ர‌மாக‌ ஒவ்வொன்றாக‌ க‌ட‌த்திவிட்டார். எப்ப‌டி க‌ட‌த்தினார்?

"முத‌ல்ல ஆட்டை கொண்டு போனாரு‌!" 

"இங்க‌ புலி புல்லை தின்னாது. ச‌ரி!"

"அடுத்து ஆட்டை கொண்டு போனாரு!" 

"சரி.அங்க‌ ஆட்டை விட்டுவிட்டு திரும்பினால், ஆடு புல்லை தின்னுடுமே!" என்றால்,

"அட‌ ஆமால்ல‌!" என‌ சிரிக்கிறாள்.

திரும்ப‌வும் முதலிலிருந்து...

"முத‌ல்ல‌ புலியை கொண்டு போனாரு!"

"அப்ப‌ ஒரு பிர‌ச்ச‌னை வ‌ருதே! ஆடு புல்லை தின்னுடுமே!"

"அட‌ ஆமால்ல‌!" என மீண்டும் சிரிக்கிறாள்.

இப்ப‌டியே உரையாட‌ல் தொட‌ர்ந்த‌ 15 நிமிட‌த்தில்,  "இது க‌ஷ்ட‌மா இருக்குப்பா! ஈஸியா ஏதாவ‌து சொல்லுங்க!" என‌ சொல்லிவிட்டாள். 

எங்க‌ அப்பா என‌க்கு இர‌ண்டு நாள் த‌வ‌ணை கொடுத்தார். உன‌க்கு ஒரு நாள் த‌ர்றேன். நாளை இர‌வு என‌க்கு ப‌தில் சொல்.  பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இந்த‌ க‌தையை கேட்டுக்க‌லாம்!

எத்த‌னை பேரிட‌ம் எப்ப‌டி க‌தை சொல்ல‌ப்போகிறாளோ?!
 

5 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் said...

முதல்லே ஆட்டைக்கொண்டு போனார்.திரும்பி வந்ததும் புல்லுக்கட்டை கொண்டு போனார். புல்லுக்கட்டை அங்கே இறக்கிட்டு ஆட்டைத் திரும்பி இந்தப்பக்கம் கொண்டுவந்தார். இங்கே ஆட்டை விட்டுட்டு மறுபடி புலியை அந்தப்பக்கம் கொண்டு போனார். கடைசியா ஆட்டை அந்தப்பக்கம் கொண்டு போனார்.

இல்லைன்னா ஒரே ட்ரிப்லே புலியை ஒரு கூண்டிலே அடைச்சுப் படகில் ஏற்றிட்டு, ஆட்டை படகின் ஒரு மூலையில் கட்டிப்போட்டுட்டு புலிகூண்டுக்குப் பக்கத்துலே புல்லுக்கட்டை வச்சுட்டு இவரும் படகில் ஏறி எல்லோருமா அக்கரை சேர்ந்தார்கள்:-))))

DiaryAtoZ.com said...

என் குழந்தைகளிடம் இந்த கதையை சொல்கிறேன். நன்றி

குருத்து said...

துளசி அம்மாவிற்கு,

நீங்கள் முதலில் சொன்னது சரி. திரும்பி கொண்டுவருவதை பலரும் சிந்திப்பதில்லை. அதை புரிந்துகொண்டால், எளிதில் விடுவித்துவிடலாம்.
த‌ங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி.

குருத்து said...

Diary A to Z.com,

தங்கள் வருகைக்கு நன்றி.

Unknown said...

Superb